ஓய்வு பெற்ற ராணுவ ஹாக்கி வீரர்கள்
குன்னுார்: குன்னுார் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, முன்னாள் ராணுவ ஹாக்கி விளையாட்டு வீரர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடந்தது.அதில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.மெட்ராஸ் ரெஜிமென்ட் முன்னாள் துணை கமாண்டன்ட் கர்னல் மார்ட்டின், வாரண்ட் அலுவலர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். முன்னதாக, மைதானத்தில் ஹாக்கி வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து நடந்த போட்டியில் எம்.ஆர்.சி.ஏ., அணி, எம்.ஆர்.சி.பி., அணியை வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை, பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். காணிக்கராஜ் நகரில் நடந்த ஒருங்கிணைப்பு விழாவில், கனகமணி, சந்திரசேகர், ஜெயஸ்ரீ, ஜெயந்தி, பிரியா நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். கேம்பயர், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், தலைவர் ஜெயராஜ், துணை தலைவர் ரவி, செயலாளர் வினோத்குமார், பொருளாளர் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அடுத்த ஆண்டிற்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி பெங்களூருவில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.