உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரம் பழைய வாகனங்கள் சுற்றி வளரும் செடிகளால் ஆபத்து

சாலையோரம் பழைய வாகனங்கள் சுற்றி வளரும் செடிகளால் ஆபத்து

கூடலுார்:கூடலுார் நந்தட்டி அருகே, சாலையோரங்களில், நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களை சுற்றி வளரும் செடிகளால், அப்பகுதி விஷப்பூச்சிகள் வசிப்பிடமாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.கூடலுாரில் பயன்படுத்த முடியாத பழைய வாகனங்களை சாலையோரங்களில் நிரந்தரமாக நிறுத்தி செல்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இவைகள், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. அவைகளை அகற்ற அதிகாரிகளும் நடவடிக்கையும் எடுப்பதில்லை.கோழிக்கோடு சாலை, செம்பாலா முதல் நந்தட்டி வரை, சாலையோரங்களில் இருபுறமும், ஏராளமான பயனற்ற பழைய வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.மேலும், அப்பகுதியில் செடிகள், தாவரங்கள் வளர்ந்து பழைய வாகனங்களை சூழ்ந்துள்ளன. இதனால், அந்த இடம் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் வசிப்பிடமாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் பணிமனைகளுக்கு, பழுது நீக்க வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நேரம் சாலையில், நிறுத்தப்படுவதால், வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள், டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'இப்பகுதி சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களை சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்துள்ளது. இவைகள் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !