உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இடிந்த ஆற்றோர டீ கடை: உயிர் தப்பிய மக்கள் கட்டடம் அந்தரத்தில் தொங்குவதால் ஆபத்து

இடிந்த ஆற்றோர டீ கடை: உயிர் தப்பிய மக்கள் கட்டடம் அந்தரத்தில் தொங்குவதால் ஆபத்து

குன்னுார்:குன்னுாரில் அந்தரத்தில் தொங்கிய ஆற்றோரம் ஒரு கடையின் அடிப்பகுதி நேற்று இடிந்து விழுந்தது.குன்னுார் பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., சாலை, ஆட்டோ ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த, 2019ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. அப்போது, ஆற்றோர ஆக்கிரமிப்பில், 73 கடைகள் உள்ளன. முதற்கட்டமாக, 55 கடைகள் இடிக்க 'நோட்டீஸ்' வழங்கி மொத்தம், 44 கடைகள் மட்டுமே அகற்றப்பட்டன. சிலர் தடை ஆணை பெற்றதால் மற்ற கடைகள் இடிப்பது கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் எதிரே, 7 கடைகள் இடிக்க கடந்த மாதம் வருவாய் துறை சார்பில் ஆக்கிரமிப்பு கடைகளில் உள்ளவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அப்போது, சிலர், சுப்ரீம் கோர்ட்டில் சென்று தடை ஆணை பெற்றதாக கூறி, இடிப்பது நிறுத்தப்பட்டது.கடந்த, 19ம் தேதி டீக்கடையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் கடைகள் அந்தரத்தில் தொங்கி இருந்தது தொடர்பாக 'தினமலர்' நாளிதழில், 20ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. ஆய்வு செய்த அதிகாரிகள் கடைக்காரர்களுக்கு பாதுகாப்புடன் இருக்க அறிவுரை அளித்து சென்றனர். இந்நிலையில, நேற்று மதியம் இங்கிருந்த டீக்கடையின் அடிப்பாகம் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. உடனடியாக கடையில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து வெளியேறினர்.இப்பகுதியில் மீண்டும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து இந்த கடைகள் நடத்த தடை விதித்தனர்.மக்கள் கூறுகையில், 'இங்குள்ள மற்ற கடைகளும் இடியும் அபாயத்தில் உள்ளதால் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.குன்னுார் ஆர்.டி.ஓ.. சதீஷ்குமார் கூறுகையில்,'' இப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் உயிருக்கு ஆபத்து உள்ளதால், இதற்கான சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ