மேலும் செய்திகள்
பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்
08-Mar-2025
குன்னுார்; குன்னுாரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நகர பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நீலகிரி மாவட்ட தலைவர் தர்மன் அறிவுறுத்தலின் படி, குன்னுாரில் கையெழுத்து இயக்கம் நடந்தது. நகர தலைவர் பாலாஜி தலைமையில், பஸ் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட், மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் பாப்பண்ணன்,எஸ்.சி., அணி மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், எஸ்.சி., அணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல், நகர பொது செயலாளர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Mar-2025