உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புலிகள் காப்பக தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை; எச்சரிக்கை பலகை அவசியம்

புலிகள் காப்பக தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை; எச்சரிக்கை பலகை அவசியம்

கூடலுார்; முதுமலை, வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைந்துள்ள பகுதிகளில், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.முதுமலை புலிகள் காப்பகம், தொரப்பள்ளி முதல், தமிழக-கர்நாடக எல்லையான கக்கனல்லா வரை மைசூரு தேசிய நெடுஞ்சாலையும், தெப்பக்காடு- மசினகுடி இடையே மாநில நெடுஞ்சாலையில் செல்கிறது.இங்குள்ள வனவிலங்குகள் உணவு, குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. அவைகள், வனப்பகுதி வழியாக வேகமாக இயக்கப்படும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்கும் விதமாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளுக்கும் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்கின்றன.ஆனால், சாலையில் வேகத்தடை இருப்பது குறித்து பெரும்பாலான இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் வைத்துள்ள அறிவிப்பு பலகை சாய்ந்து பயனற்று கிடக்கிறது. இதனால் இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், வேகத்தடை இருப்பது குறித்து அறியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். விபத்துகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'கர்னாடகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து, நீலகிரிக்கு இவ்வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வந்து செய்கின்றனர். முதுமலை சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்ட பகுதிகளில், அது குறித்து அறிவிப்பு பலகை இல்லாததால், வேகத்தடை இருக்கும் இடம் தெரியாமல் வாகனத்தை இயக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், வேகதடையை பார்த்து, திடீரென வாகனத்தை நிறுத்தி செல்ல வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க, வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில், அது குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை