உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொங்கி செல்லும் மாணவர்கள் ஆபத்தில் சிக்கும் அபாயம்

தொங்கி செல்லும் மாணவர்கள் ஆபத்தில் சிக்கும் அபாயம்

பந்தலுார் : பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழக கூடலுார் கிளையில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.அதில், காலை மற்றும் மாலை நேரங்களில் குந்தலாடி,பொன்னானி, உப்பட்டி வழித்தடத்தில் இயக்கப்படும் இரண்டு பஸ்களிலும், அதிக அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயணிக்கின்றனர்.இவர்களுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளும் பயணிக்கும் நிலையில், கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. காலை 8-:15 மணிக்கு குந்தலாடியில் இருந்து கூடலுாருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது நம்பியார்குன்னு பகுதியில் இருந்து இந்த வழித்தடத்தில் இயக்கத்திற்கு வருகிறது.இதனால், கூடலுார் கல்லுாரிக்கு நெலாக்கோட்டை, தேவர் சோலை வழியாக சென்று வந்த மாணவர்கள், தற்போது இந்த பஸ்சில் பயணிக்கும் நிலையில் கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது. நெல்லியாளம், உப்பட்டி, பெருங்கரை, அம்புரோஸ் வளைவு, தொண்டியாளம், மேங்கோரேஞ்ச் பகுதிகளில் நிற்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பயணிகளை பஸ்சில் ஏற்றிச் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.இதனால், தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.கல்லுாரி மாணவர்கள் தொங்கியபடி பயணிப்பதால், ஆபத்து அபாயம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பொன்னானி- கூடலுார் வழித்தடத்தில் காலை, 9:00- மணிக்கு கூடுதலாக ஒரு அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை