உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலையில் ஊர்வன வகைகள் கணக்கெடுப்பு

முதுமலையில் ஊர்வன வகைகள் கணக்கெடுப்பு

கூடலுார்: முதுமலை, மசினகுடி கோட்டத்தில், முதல் முறையாக, ஊர்வன மற்றும் நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ்வி உயிரின வகைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்தது.முதுமலை மசினகுடி பகுதியில் வனவிலங்குகள், பறவைகள், அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகள், பறவைகள், புலி உள்ளிட்ட மாமிச உண்ணிகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.நடப்பாண்டு, முதல் முறையாக, ஊர்வன மற்றும் இருவாழ்வி உயிரின வகைகள் குறித்து, 4 நாட்கள் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம், துவங்கியது. முதல், நாள், கணக்கெடுப்பு குறித்து வன ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.தொடர்ந்து, இரவு, துணை இயக்குனர் அருண்குமார் மேற்பார்வையில், வனச்சரகர்கள் பாலாஜி, தயானந்தன், தனபால், தீனதயாளன் தலைமையில், மசினகுடி, சீகூர், சிங்காரா, நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகங்களில், 8 இடங்களில், வன ஊழியர்கள் தன்னார்வலர்கள், ஊர்வன மற்றும் இருவாழ்வி உயிரின வகைகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று, காலை 8:00 மணி முதல், மாலை வரை சில பகுதிகளில் கணக்கெடுப்பு பணிநடந்தது.வனத்துறையினர் கூறுகையில்,'மசினகுடி கோட்டத்தில் முதல் முறையாக, ஊர்வன மற்றும் இருவாழ்வி உயிரின வகைகள் குறித்த கணக்கெடுப்பு பகல் மற்றும் இரவில் நடைபெறுகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, 8 இடங்களில், வன ஊழியர்கள் தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி செவ்வாய்கிழமை நிறைவு பெறும். கணக்கெடுப்பு முடிவில் ஊர்வன மற்றும் இரு வாழ்வு உயிரினங்கள் வகைகள் குறித்து தெரியவரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை