உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ‘இது எங்க பகுதி பஸ் நீங்க இங்கு வர வேண்டாம்’

‘இது எங்க பகுதி பஸ் நீங்க இங்கு வர வேண்டாம்’

ஊட்டி : ஊட்டி அருகே, 8 கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: ஊட்டி அருகே கன்னேரி முக்கு, கொட்லைன் , துாபகண்டி, செலகல், சோலுார் எஸ்டேட், கக்கன்ஜி நகர், கல்லுண்டி, கடை பஜார் உள்ளிட்ட கிராமங்களில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராம மக்கள் கோக்காலில் பஸ் ஏற சென்றால், ‘இது எங்களுடைய பஸ்; நீங்கள் இங்கு வர வேண்டாம்,’ என கூறி அங்குள்ள மக்கள், பஸ் ஏற விடாமல் தடுகின்றனர். இதனால், அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஊட்டி -கன்னேரி மூக்கு வழித்தடத்தில் புதிய பஸ் விட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், தற்போது இயங்கி வரும் பஸ்சை காலை, 10:30 மணி; மதியம் 1:30 மணி; மதியம் 3:30 மணி,’ ஆகிய நேர பஸ்களை கன்னேரி முக்கு வரை இயக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை