உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொது கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயன்

பொது கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயன்

கூடலுார்;'கூடலுார் பழைய கோர்ட் சாலையில், பராமரிப்பின்றி உள்ள பொது கழிப்பிடத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.கூடலுார் பழைய கோர்ட் சாலையில், ஆர்.டி.ஓ., தாசில்தார், உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன், தனியார் பள்ளி, கிளை சிறை, வனச்சரக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால், அரசு வேலை நாட்களில், பொதுமக்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அவசர தேவைக்கு பயன்படுத்த கழிப்பிட வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வாக, ஆர்.டி.ஓ., அலுவலகம் வருகை, அரசு துறை சார்பில் பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டது. அந்த கழிப்பிடம் பராமரிப்பின்றி செயல்பாட்டில் இல்லாததால், பொதுமக்கள் கழிப்பிடம் வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு, தீர்வாக பயனற்று கிடக்கும் கழிப்பிடத்தை சீரமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், 'இப்பகுதிக்கு வரும் மக்கள் அவசர தேவைக்கு பயன்படுத்த கழிப்பிடம் வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த கழிப்பிடத்தை சீரமைத்து, பராமரிப்பு பணிக்கு ஊழியரை நியமித்து, கட்டண கழிப்பிடமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ