உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஜாரில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

பஜாரில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

பந்தலுார்;பந்தலுார் பஜார் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால்,போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.பந்தலுார் பஜார் பகுதி சாலை மிகவும் குறுகலாக உள்ளதுடன், சாலை ஓரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதனால், வியாபாரிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில், ஒரு சில வாகன ஓட்டுனர்கள், அரசு பஸ்கள் நிற்கும் இடங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை முன்பாக, தங்களின் சொந்த வாகனங்களை பல மணி நேரம் நிறுத்தி வைக்கின்றனர்.இதனால், அரசு பஸ்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு, பயணிகள் மற்றும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, பந்தலுார் பஜார் பகுதி சாலைகளில், நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ