உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விநாயகர் சதுர்த்தி போலீசார் அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தி போலீசார் அணிவகுப்பு

கூடலுார்;விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதற்காக நகரம் முதல் கிராம பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து, பூஜிக்கப்பட்டு, சிலைகள் விசர்ஜனம் செய்யும் விழாக்கள் நடைபெற உள்ளது.கூடலுாரில் இந்து முன்னணி சார்பில், பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைத்து, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இங்கு பூஜிக்கப்படும், விநாயகர் சிலைகள், 15ம் தேதி விசர்ஜனம் செய்ய உள்ளனர். விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கூடலுாரில் நேற்று, போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்துக்கு, டி.எஸ்.பி., வசந்தகுமார் தலைமை வகித்தார். ஊர்வலம் ஊட்டி - -மைசூரு தேசிய நெடுஞ்சலை, பழைய கோர்ட் சாலை, கோழிக்கோடு சாலை வழியாக சென்று, துப்புகுட்டிபேட்டை பகுதியில் நிறைவு பெற்றது. இதேபோல, பந்தலுார் நகர பகுதியிலும் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை