முதுமலையில் பாறு கழுகுகள் கணக்கெடுப்பு; களப்பணியில் 105 பேர் களப்பணியில் 105 பேர்
கூடலுார் ;முதுமலையில், துவங்கிய பாறு கழுகுகள் கணக்கெடுப்பு பணியில், 105 வன ஊழியர்கள்; தன்னார்வளர்கள் ஈடுபட்டுள்ளனர்'வனத்தின் துாய்மை பணியாளர்' என்று அழைக்கப்படும் பாறு கழுகுகள், பெருமளவில் அழிந்து விட்டன. தற்போது, முதுமலை மற்றும் மசினகுடி, அதனை ஒட்டிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெல்லை வனப்பகுதி, கர்நாடகா பந்திப்பூர், நாகர்ஹோலே, பி.ஆர்.டி.,புலிகள் காப்பகங்கள், கேரளா வயநாடு பகுதிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.இதனை பாதுகாக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. கடந்த, 2023ல் நடந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டது. தொடர்ந்து, நடப்பு ஆண்டுக்கான, ஒருங்கிணைந்த இரண்டு நாட்கள் பாறு கழுகுகள் கணக்கெடுப்பு பணி நேற்று, துவங்கியது.அதில், முதுமலை புலிகள் காப்பகத்தில் துணை இயக்குனர் வித்யா தலைமையிலும், மசினகுடி கோட்டத்தில் துணை இயக்குனர் அருண்குமார் தலைமையிலும் வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'அழிந்து வரும் பட்டியலில் உள்ள பாறு கழகுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது. 2023ல் நடந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில், 320 பாறு கழுகுகள் இருபது தெரியவந்தது.நடப்பு ஆண்டு, எண்ணிக்கை குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணி இரண்டு நாள் நடைபெறுகிறது. முதுமலை மற்றும் மசினகுடியில், 26 இடங்களில் வன ஊழியர்கள், மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி, ஊட்டி அரசு கல்லுாரி மாணவர்கள் என, மொத்தம். 105 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்,' என்றனர்.
முதுமலை புலிகள் காப்பகம்-78சத்தியமங்கலம் காப்பகம் - 70கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம் -65நாகர்ஹோலே புலிகள் காப்பகம்-- 38பி.ஆர்.டி.,புலிகள் காப்பகம் -14கேரளா வயநாடு -51நெல்லை வனப்பகுதி- 4