நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு வரவேற்பு
பந்தலுார் : பந்தலுார் அருகே அம்பலவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கமலாம்பிகை. இவர், அரசு பள்ளி வளாகத்தை தனியார் பள்ளி போன்று சீரமைக்கவும், மாணவர்கள் கல்வி மட்டுமின்றி, விளையாட்டு துறையிலும் சாதிப்பதற்கு வழிகாட்டியாக உள்ளார்.அவரது கல்வி சேவையை பாராட்டி, மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்கியது. விருது பெற்று பள்ளிக்கு திரும்பிய ஆசிரியருக்கு, அய்யன்கொல்லி பஜாரில் இருந்து செண்டை மேள வாத்தியங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். பி.டி.ஏ. தலைவர் திருச்செல்வி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன், அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. ஆசிரியர் மகாலிங்கம் நன்றி கூறினார்.