மேலும் செய்திகள்
'மெகா' குடிநீர் தொட்டி அமைக்கும் பணி
19-Aug-2024
கோத்தகிரி:'கோத்தகிரி ஜான் சல்லிவன் நினைவு பூங்காவை இரண்டாம் சீசனுக்குள் திறக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அமைந்துள்ள முதல் கலெக்டர் அலுவலகமான ஜான் சல்லிவன் நினைவகம், தற்போது, நீலகிரி ஆவண காப்பகமாக விளங்கி வருகிறது. இந்த காப்பகம் அருகே, அரசுக்கு சொந்தமான நிலத்தில், சல்லிவன் நினைவு பூங்கா அமைந்துள்ளது. அழகான நுழைவு வாயில், நடைபாதை, இருக்கைகள் அமைக்கப்பட்டு, புல்தரை சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தோட்டக்கலைத்துறை பராமரித்து வரும் இப்பூங்காவில், ஊஞ்சல் மற்றும் விளையாட்டு அம்சங்களுக்கான பணி நடந்து வருகிறது.சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பூங்காவை ஆய்வு செய்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்த, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இருப்பினும், பூங்கா திறப்பதற்கான அறிகுறிகள் இல்லாமல் உள்ளது. நீலகிரியில், அடுத்த மாதம், இரண்டாவது சீசன் துவங்க உள்ள நிலையில், சல்லிவன் பூங்காவை திறப்பது எப்போது என, உள்ளூர் மக்கள் உட்பட, சுற்றுலா பயணிகள் மத்தியில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
19-Aug-2024