உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊசி மலை பாறையில் ஒயர்லெஸ் ரிப்பீட்டர் நிலையம்

ஊசி மலை பாறையில் ஒயர்லெஸ் ரிப்பீட்டர் நிலையம்

பந்தலுார்; பந்தலுார் அருகே கரியசோலை பகுதியில் உள்ள ஊசிமலை பகுதியில், 'ஒயர்லெஸ் ரிப்பீட்டர்' நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை வனத்துறை மேற்கொண்டுள்ளனர். கூடலுார் வன கோட்டத்திற்கு உட்பட்ட பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், குறிப்பிட்ட சில இடங்களில் மொபைல் போன் சிக்னல் கிடைக்காத நிலை தற்போதும் தொடர்கிறது. இது போன்ற நேரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் மற்றும் தாக்குதல் குறித்த சம்பவங்களை, வனக்குழுவினர் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பந்தலுார் அருகே, ஏலியாஸ் கடை பகுதியில் புல்லட் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க, தற்காலிக 'இ--பேக் வாக்கி டாக்கி' சிக்னல் ஏற்படுத்தப்பட்டது.இதனால், யானைகள்நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் உயரமான மலை பகுதியான, ஊசி பாறை பகுதியில், ஒயர்லெஸ் ரிப்பீட்டர் நிலையம் அமைப்பதற்கான பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இதற்கான பொருட்களை கொண்டு செல்வதற்காக தற்காலிக சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு கூறுகையில், ''செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் யானை கண்காணிப்பு பணிக்காக ஒயர்லெஸ் தகவல் தொடர்பை நிறுவுவதற்காக ரிப்பீட்டர் நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வன கோட்டத்தில், 35 முன் எச்சரிக்கை கோபுரங்கள் மற்றும், 20 செயற்கை நுண்ணறிவு கோபுரங்கள் நிறுவப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு திறக்கப்படும் கட்டுப்பாட்டு மையம் நாடுகாணியில் கட்டப்பட்டு வருகிறது. ஏப்., மாதத்தில் பணிகள் நிறைவடையும் நிலையில், யானை -மனித மோதல் கட்டுப்படுத்தப்படும். இந்த பணியில், 24 மணி நேரமும் தலா 4 ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ