தாவரவியல் பூங்காவில் யோகா ;சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ஊட்டி;ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.ஊட்டி தாவரவியல் பூங்காவில், 126 வது மலர்கண்காட்சி துவங்கி, வரும், 20ம் தேதி வரை, முதல்முறையாக, 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். பார்வையாளர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், பூங்காவுக்குள் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.சுகாதார துறை, பொதுமருத்துவம், சித்தா பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், மருத்துவர் கீதா முன்னிலையில், பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், இதுவரை நடந்த மலர் கண்காட்சியின் போது, இசை கச்சேரி உட்பட, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு அந்த வகையான நிகழ்வுகளுடன், முதல் முறையாக, யோகா பயிற்சி அளிக்கப்பட்டது, சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.