உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100 சதவீத டாக்டர்கள்

நீலகிரியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100 சதவீத டாக்டர்கள்

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 444 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ கல்லுாரி கட்டப்பட்டு வருகிறது. பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் கூறியதாவது: ஊட்டி மருத்துவ கல்லுாரியின் இறுதிக்கட்ட பணிகள், விரைவில் முடிக்கப்பட்டு, வரும் மே மாதத்திற்கு பிறகு, மாநில முதல்வர் திறந்து வைக்க உள்ளார். மாநிலத்தில், 20 மாவட்டங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. அந்த வரிசையில், நீலகிரி மாவட்டத்திலும் டாக்டர்கள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், நடந்து முடிந்த டாக்டர்கள் தேர்வில், 1,021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 20 மாவட்டங்களிலும் பணியமத்தப்பட உள்ளனர்.ஊட்டி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள, 57 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, 100 சதவீத டாக்டர்கள் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள மலை பிரதேசங்களில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், ஊட்டி மருத்துவ கல்லுாரி, 700 படுக்கை வசதிகளுடன் முதல் இடத்தில் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி, மாவட்ட கலெக்டர் அருணா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி