லோக் அதாலத்தில் 1051 வழக்குகளுக்கு தீர்வு
ஊட்டி: ஊட்டியில் நடந்த மக்கள் நீதி மன்றத்தை மாவட்ட நீதிபதி முரளிதரன் பங்கேற்று வழக்குகளை விசாரித்தார். மகிளா கோர்ட் நீதிபதி செந்தில்குமார் , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மும்மூர்த்தி, குடும்ப நல கோர்ட் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். கூடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடலூர் வட்ட சட்டப் பணி குழு சார்பில், மக்கள் நீதிமன்றம் நடந்து. வட்ட சட்ட பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மாஜிஸ்திரேட்கள் சரவணக்குமார், முருகேசன் மற்றும் வக்கீல்கள் முன்னிலை வகித்தனர். பந்தலுார், குன்னுார், கோத்தகிரி என, மாவட்ட முழுவதும் நடந்த லோக் அதாலத்தில், 4861 வழக்குகள் எடுக்கப்பட்டு, 1051 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் வாயிலாக 4.75 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. நீதிபதிகள் பிரகாஷ், சோலியா, வக்கீல் விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.