உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குறை தீர்க்கும் கூட்டத்தில் 113 கோரிக்கை மனுக்கள்

குறை தீர்க்கும் கூட்டத்தில் 113 கோரிக்கை மனுக்கள்

ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில், 113 மனுக்கள் பெறப்பட்டது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்தி விக்னேஷ் குமார் என்பவரின் குடும்பத்தாருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்களிடமிருந்து 113 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 'பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி வழங்கும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என, கலெக்டர் உத்தரவிட்டார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) கவுசிக் , மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ