புனித அந்தோணியார் குருசடியில் 121வது ஆண்டு திருவிழா
குன்னூர்; -குன்னூர் வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை புனித அந்தோணியார் குருசடியில், 121வது ஆண்டு தேர் திருவிழா நடந்தது.நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள சின்ன வண்டிச்சோலை புனித அந்தோணியார் குருசடியில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் திருப்பலி நடந்தது.நேற்று முன்தினம் 121வது ஆண்டு திருவிழா நடந்தது. காலை 11:30 மணிக்கு பேரக்ஸ் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை தலைமையில், திருநாள் சிறப்பு திருப்பலி நடந்தது.தொடர்ந்து அன்பின் உணவு நலனால் புனிதரின் சுலபம் அலங்கார தேர்பவனி நடந்தது.குருசடியில் துவங்கிய பவனி, பேக்ஸ் எம்.ஆர்.சி., எம்.எச்., வழியாக சென்று, மீண்டும் குருசடியை அடைந்தது.புனித அந்தோனியார் பஜனை சங்கத்தினரின் ஜெபம் புனிதர்களின், பக்தி பாடல்கள், மங்கள பாட்டு இடம்பெற்றது.ஏற்பாடுகளை, குருசடி பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் திரவியம் தலைமையில், உதவி பங்கு தந்தையர், புனித அந்தோணியார் பஜனை சங்கத்தினர் சின்ன வண்டிச்சோலை மலையப்பன் காட்டேஜ், ஊர் மக்கள் செய்திருந்தனர்.