உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் 17 வருவாய் துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்

நீலகிரியில் 17 வருவாய் துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்

ஊட்டி; நீலகிரியில், 17 வருவாய் துறை அதிகாரிகளை மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் ஆகிய, 6 தாலுகாகள் உள்ளன. தாலுகா அலுவலகங்களில் வருவாய் துறையை சேர்ந்த தாசில்தார், தனி தாசில்தார் மற்றும் டாஸ்மாக்கில் மேற்பார்வை அலுவலர்களாக பணிபுரிந்து வந்த, 17 பேரை மாற்றம் செய்து கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, தாசில்தார்கள், ஊட்டிக்கு சங்கர் கணேஷ்-; குந்தா-சுமதி; குன்னுார்-ஜாகீர்; கோத்தகிரி-ராஜலட்சுமி; கூடலுார்-முத்துமாரி, பந்தலுார்-சிராஜுனிஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல், கூடலுார் ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் சரவணகுமார்; தனி தாசில்தார் (டி.டபுள்யூ.,) கலைச்செல்வி; பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் கனி சுந்தரம்; குந்தா தனி தாசில்தார் கோமதி; குன்னுார் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி; குன்னுார் தனி தாசில்தார் (எஸ்.எஸ்.எஸ்.,) காயத்ரி; ஊட்டி தனி தாசில்தார் (எல்.ஏ.) ஆனந்தி உட்பட, 17 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundaran manogaran
நவ 30, 2024 14:03

அத்தனை பேர் வீடுகளிலும் சோதனை நடத்தலாம்.... அந்த அளவுக்கு வசூல் பார்த்திருக்கிறார்கள்..


சமீபத்திய செய்தி