ஊட்டியில் 171 பள்ளி வாகனங்கள் ஆய்வு
ஊட்டி : ஊட்டி அரசு கலைக் கல்லுாரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.நீலகிரியில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஊட்டி அரசு கலைக் கல்லுாரி மைதானத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார். ஆய்வில், முதலுதவி பெட்டி, மருந்து, தகுதி சான்று, தீயணைப்பு உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முதற்கட்டமாக, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார் பகுதிகளை சேர்ந்த,352 பள்ளி வாகனங்களில் , ஊட்டியில் 171 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. எஸ்.பி., நிஷா, வட்டார போக்குவரத்து அலுவலர், தீயணைப்பு துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.