உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நலம் காக்கும் மருத்துவ முகாம் 2,100 பேர் பயன்

நலம் காக்கும் மருத்துவ முகாம் 2,100 பேர் பயன்

கூடலுார்: கூடலுாரில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில், 2,100 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். கூடலுார் ஜி.டி.எம்.ஓ., பள்ளியில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் வரவேற்றார். மாவட்ட சுகாதார அலுவலர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சுகாதார துறைகள் இணை இயக்குனர் ராஜசேகர், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர், ஆர்.டி.ஓ., குணசேகரன், நகராட்சி தலைவர் பரிமளா, தாசில்தார் முத்துமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, நடந்த மருத்துவ முகாமில், 17 துறை சார்ந்த சிறப்பு டாக்டர்கள் பங்கேற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ முகாமை, அரசு கொறடா ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். 2100 பேர் சிகிச்சை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ