உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நள்ளிரவில் சீல் வைக்கப்பட்ட 24 கடைகள் ;மார்க்கெட் வியாபாரிகள் அதிருப்தி

நள்ளிரவில் சீல் வைக்கப்பட்ட 24 கடைகள் ;மார்க்கெட் வியாபாரிகள் அதிருப்தி

குன்னுார்; குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில் இரவு நேரத்தில், 24 கடைகளுக்கு 'சீல்' வைத்ததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்தனர்.குன்னுார் மார்க்கெட் கடைகளுக்கு நகராட்சி வாடகை வசூலித்து வருகிறது. பல ஆண்டுகளாக வாடகையை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதிரடியாக உயர்த்தியதுடன், 2016 ஆண்டில் இருந்து, 4 ஆண்டுகளுக்கான பழைய நிலுவை வாடகையையும் கட்டாயம் செலுத்த வற்புறுத்தி, வசூலித்து வருகிறது. இதற்காக அவ்வப்போது 'சீல்' வைத்து வசூலிக்கிறது. இதனால், வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில், 24 கடைகளுக்கு, அதிகாரிகள் உத்தரவின் பேரில் 'சீல்' வைக்கப்பட்டது.வியாபாரிகள் கூறுகையில்,'தேர்தல் நேரத்தில் மார்க்கெட் கடை வாடகை பிரச்னைக்கு தீர்வு காண்பதாக, வாக்குறுதி அளித்து, வெற்றி பெற்ற தி.மு.க., அரசு, வாடகையை உயர்த்தியதுடன், நிலுவை தொகையையும் கட்டாயம் செலுத்த நகராட்சி மூலம் வற்புறுத்தி வருகிறது. நகராட்சி துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், வியாபாரிகளின் நிலை குறித்து அறிந்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். நிலுவை தொகையை மொத்தமாக கட்ட முடியாத சூழ்நிலையில் சிறிது சிறிதாக கட்டிய போதும், பொருட்களுடன் சேர்த்து சீல் வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ