மேலும் செய்திகள்
குரூப் 2 தேர்வர்களுக்கு கலெக்டர் அறிவுரை
26-Sep-2025
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நாளை நடக்க உள்ள, குரூப்-2 தேர்வில் 2,604 பேர் பங்கேற்கின்றனர். கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு, 28ம் தேதி (ஞாயிறு) காலை, 9:30 மணி முதல், பகல், 12:30 மணிவரை, நீலகிரி மாவட்டத்தில், 9 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வை, 'ஊட்டி வட்டத்தில், நான்கு மையங்களில், 1170 பேர்; குன்னுார் வட்டத்தில், இரண்டு மையங்களில், 631 பேர்; கூடலுார் வட்டத்தில், மூன்று மையங்களில், 803 பேர்,' என, மொத்தம், 2,604 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வை கண்காணிக்கவும், தேர்வு கூடங்களில் திடீர் தணிக்கை மேற்கொள்ளவும், சப்-கலெக்டர்கள் மற்றும் ஆர்.டி.ஓ.,க்கள் பறக்கும் படை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை எடுத்துச் செல்ல துணை தாசில்தார் நிலையில், மொத்தம், ஐந்து இயக்க குழு நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில், ஒரு தேர்வு கூடத்திற்கு ஒருவர் வீதம் மொத்தம், ஒன்பது ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு வரும் மாற்று திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள், தேர்வு நாளன்று காலை, 8:30 மணிக்கு தேர்வு கூடத்திற் கு கண்டிப்பாக வருகை தர வேண்டும். அதிகபட்சமாக, 9:00 மணி வரை தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவர். காலம் கடந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை. இதனை கண்காணிக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு கூடத்திற்குள் 'எலக்ட்ரானிக்' பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்வுக்கு, கருப்புபந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வர்கள் ஆள்மாறாட்டம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Sep-2025