சிறை நிரப்பும் போராட்டம் ஊட்டியில் 36 பேர் கைது
ஊட்டி, ;ஊட்டியில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், 36 பேர் கைது செய்யப்பட்டனர்.'போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையை கைவிட்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி பஸ் ஸ்டாண்டில், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் துவக்கி வைத்தார். போக்குவரத்து சங்க மண்டல துணைத் தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். மண்டல துணை பொதுச்செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட தலைவர் குமார் கோரிக்கைகள் குறித்து பேசினார்.தொழிற் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,-' அரசு மருத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். ஒப்பந்த முறை, மறைமுகமான தனியார் மயமாதலை கைவிட வேண்டும்,' என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 36 பேர் கைது செய்யப்பட்டனர்.