மேலும் செய்திகள்
மக்கள் நீதிமன்றம் 14ல் கூடுகிறது
06-Jun-2025
ஊட்டி; நீலகிரியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 514 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு கள் அதிகமாக தேங்குவதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது. 514 வடக்குகளுக்கு தீர்வு
ஊட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான முரளிதரன் தலைமையில் நடந்தது. அதில், 'நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள்; சிவில் வழக்குகள்; காசோலை மோசடி; மோட்டார் வாகன விபத்து வழக்குகள்; நில ஆர்ஜித வழக்குகள்; வங்கி வழக்குகள்; வாரா கடன் வழக்குகள்; குடும்ப பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள்,' என, 1,719 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் , 514 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேற்கண்ட வழக்குகள் வாயிலாக, 2.57 கோடி ரூபாய் தீர்வு காணப்பட்டது. அதில், மகிளா கோர்ட் நீதிபதி செந்தில்குமார், குடும்ப நல நீதிபதி லிங்கம், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன், குற்றவியல் நீதிபதி சசிகலா, சார்பு நீதிபதி பாரதி பிரபா, மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், குன்னுார், கூடலுார், பந்தலுார், கோத்தகிரி ஆகிய கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
06-Jun-2025