உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினருக்கு மீன் வளர்ப்பு திட்டங்கள் 90 சதவீதம் மானியம் ; பயன் பெற அழைப்பு

பழங்குடியினருக்கு மீன் வளர்ப்பு திட்டங்கள் 90 சதவீதம் மானியம் ; பயன் பெற அழைப்பு

ஊட்டி; 'பழங்குடியின மீன் ௦வளர்ப்பு விவசாயிகள், மத்திய அரசின் மீன் வளர்ப்பு திட்டத்திற்கு 90 சதவீதம் மானியம் அளிக்கப்படுவதால் பயனடைய வேண்டும்,' என, அழைப்பு விடுக்கப்பட்டது.நீலகிரியில் வாழும் பழங்குடியினருக்கு, மாவட்ட நிர்வாகம் மானியத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் முறையாக சென்றடையும் வகையில் சம்மந்தப்பட்ட துறை சார்பில் பழங்குடியின கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதில், ஊட்டியில் செயல்பட்டு வரும் மீன் வளத்துறை, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

மீன்வள பயன் குறித்த திட்ட விபரம்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 'தார்தி ஆபா ஜன்ஜா தியாகிராம் உத்கர்ஷ்' திட்டத்தின் கீழ், மீன் வளர்ப்பு திட்டங்களான புதிய மீன்வளர்ப்பு குளம் அமைத்தல், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு, குளங்கள், உள்ளீட்டு மானிய வழங்குதல், 'பயோபிளாக்' முறையில் மீன் வளர்ப்பு, நீரின் மறு சுழற்சி முறையில் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு திட்டங்கள் மற்றும் மீன் விற்பனை திட்டங்களான குளிர் காப்பு வாகனம், ஐஸ் பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனம் போன்ற பல திட்டங்கள் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது.மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கவுசல்யா தேவி கூறுகையில்,''இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பழங்குடியின மீன் வளர்ப்பு விவசாயிகள் ஊட்டியில் உள்ள மீனவர் நலத்துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம். இத்திட்டத்திற்கு, 90 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை