உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரேஷன் கடை ஷட்டரை உடைத்த கரடி; அத்தியாவசிய பொருட்கள் சேதம்

ரேஷன் கடை ஷட்டரை உடைத்த கரடி; அத்தியாவசிய பொருட்கள் சேதம்

குன்னுார்; குன்னுாரில் நள்ளிரவில் வந்த கரடி, ரேஷன் கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து, பொருட்களை சேதம் செய்தது.குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் வரும் கரடிகள் யாரும் இல்லாத பூட்டியுள்ள கடைகள் மற்றும் வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று உணவு பொருட்களை சேதம் செய்து வருகின்றன.இந்நிலையில், மவுன்ட் பிளசன்ட் பகுதியில் உள்ள ரேஷன் கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற கரடி அங்கிருந்த சர்க்கரை, மாவு பொருட்களை உட்கொண்டு சேதம் செய்தது. அருகிலுள்ள மற்றொரு அறையில் பாமாயில் வைக்கப்பட்டிருந்ததால் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று காலை இதனை அறிந்த ரேஷன் கடை ஊழியர்கள் அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு சென்றனர். சமீபத்தில், 12 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த ரேஷன் கடையில் ஷட்டரை கரடி உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி