மேலும் செய்திகள்
மாநில எல்லை பகுதிக்கு பஸ் இல்லாமல் அவதி
14-Oct-2024
பந்தலுார் ; பாட்டவயல் பகுதியில் இருந்து பந்தலுாருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நேற்று காலை பஞ்சராகி நடுவழியில் நின்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.அரசு போக்குவரத்து கழகம், கூடலுார் கிளையில் இருந்து, பந்தலுார் அருகே குந்தலாடி பகுதிக்கு இரவு நிறுத்தப்படும் பஸ் செல்கிறது. காலை, 6:00- மணிக்கு அந்த பஸ் குந்தலாடியில் இருந்து, பாட்டவயல் சென்று பின்னர் அங்கிருந்து, பந்தலுார் அருகே கூவமூலா பகுதிக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் காலை நேரத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயணிக்கின்றனர். நேற்று காலை இந்த பஸ் உப்பட்டி அருகே பெருங்கரை என்ற இடத்தில் வந்தபோது டயர் பஞ்சர் ஆகி நடுவழியில் நின்றது. இதனால், பள்ளி மாணவர்கள் பந்தலுாருக்கு நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், அவசரமாக காலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளும் பாதிக்கப்பட்டனர். டயர் மாற்றுவதற்கு போதிய உபகரணங்கள் இல்லாததால், பஸ்சில் மாற்று டயர் இருந்தும் டயரை மாற்ற முடியாமல் டிரைவர் சிரமப்பட்டார். எனவே, பஸ்கள் பழுதை நீக்கி இயக்கவும் தேவையான உபகரணங்களை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
14-Oct-2024