உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி கடை சேதம்

கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி கடை சேதம்

கூடலுார், ;கூடலுார் நடுவட்டம், அனுமாபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா கார் காய்கறி கடையின் மீது மோதிய விபத்தில், காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று காலை, கூடலுாரை கடந்து ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, ஊட்டி நோக்கி சென்றனர். மதியம், 12:30 மணிக்கு நடுவட்டம் அனுமாபுரம் அருகே, அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர காய்கறி கடையில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த சுற்றுலா பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கார் மோதியதில் காய்கறி கடை சேதமடைந்தது. அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து பைக்காரா எஸ்.எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !