உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீட்டின் கூரை மீது பாய்ந்த கார்; அதிர்ஷ்டவசமாக தப்பிய இருவர்

வீட்டின் கூரை மீது பாய்ந்த கார்; அதிர்ஷ்டவசமாக தப்பிய இருவர்

ஊட்டி : ஊட்டி சாலையில் கார் ஒன்று வீட்டின் கூரை மீது பாய்ந்து விபத்துக்குள்ளானது.தீபாவளி பண்டிகையை கொண்டாட பெங்களூரில் பணிபுரிந்து வரும், குன்னுாரை சேர்ந்த லெனின் என்பவர், தனது தாயுடன் பெங்களூரில் இருந்து நேற்று காலை புறப்பட்டு ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரது கார் ஊட்டி அருகே உள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் வந்தபோது காரின் டயன் ஒன்று பஞ்சரானது. இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது மோதி, பின்னர் அருகில் இருந்த வீட்டின் கூரை மீது பாய்ந்து சென்று விழுந்தது.சப்தம் கேட்டு வெளியே வந்த அந்த பகுதி மக்கள் காரில் இருந்த லெனின் மற்றும் அவரது தாயை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி