மேலும் செய்திகள்
குழியில் சிக்கிய அரசு பஸ்; போராடி மீட்ட பயணிகள்
11-Dec-2024
குன்னுார்; கோவையில் இருந்து கூடலுார் சென்ற அரசு பஸ் டிரைவருக்கு திடீர் உடல் பாதிப்பு ஏற்பட்ட போது, அருவங்காட்டில் நிறுத்தி முதலுதவி எடுத்ததால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.கூடலுார் போக்குவரத்துக் கழக கிளையை சேர்ந்த டிரைவர் அப்துல் சலீம். நேற்று முன்தினம் காலை கோவையிலிருந்து கூடலூர் நோக்கி, 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் ஓட்டி வந்து கொண்டிருந்தார். இதில், அருவங்காடு பகுதியில் வந்த போது, இவருக்கு மயக்கம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாக கூறி, பஸ்சை நிறுத்தினார். உடனடியாக கண்டக்டர் அவரை அருகில் இருந்த அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.சோதனையில், 'அவருக்கு ரத்த உயர் அழுத்தம் இருந்ததால் பாதிப்பு ஏற்பட்டது,' என, தெரிய வந்தது. எனினும், மருந்துகள் எடுத்து கொண்டு, 15 நிமிடம் ஓய்வெடுத்து, மீண்டும் அதே பஸ்சை கூடலுார் நோக்கி இயக்கி சென்றார். இதனால், பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
11-Dec-2024