திருக்கல்யாண நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஊட்டி ; ஊட்டி அருள்மிகு வேணுகோபால சுவாமி கோவிலில் கூடாரவல்லி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி அருள்மிகு வேணு கோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதில், சுவாமிக்கு திருமஞ்சனம், 108 கலச அபிஷேகம், திருபள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்கள் பாடி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, 6:05 மணிக்கு, கூடாரவல்லி நிகழ்ச்சியை ஒட்டி ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.