உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட ஒற்றை யானை; மக்கள் பணிக்கு செல்ல முடியாமல் அச்சம்

 தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட ஒற்றை யானை; மக்கள் பணிக்கு செல்ல முடியாமல் அச்சம்

குன்னுார்: குன்னுார் கோடேரி சுற்றுப்புற பகுதியை விட்டு செல்லாத ஒற்றை யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குன்னுார் அருகே கோடேரி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை அங்குள்ளவர்களின் வீடுகளை உடைத்ததுடன், தோட்டத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் நீண்ட நேரம் சாலையில் உலா வந்தது. மக்கள் நடமாட அச்சமடைந்தனர். இந்நிலையில், நேற்று காலை கிளன்கர்னே தேயிலை எஸ்டேட் பகுதியில் உலா வந்ததுடன் தண்ணீர் தொட்டிகளை உடைத்தது. தோட்டத்தில் இருந்த மரத்தை சாய்த்தது. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் யானையால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. தேயிலை பறிக்கவும் தொழிலாளர்கள் செல்ல முடிவதில்லை. மக்கள் கூறுகையில்,' இந்த பகுதிகளை விட்டு நகராமல் முகாமிட்டுள்ள, ஒற்றை யானையை விரட்டினாலும் செல்லாததால், கும்கி யானையை வரவழைத்து, விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ