உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஸ்டான்லி பார்க் சாலை படுத்து உறங்கிய கரடி

ஸ்டான்லி பார்க் சாலை படுத்து உறங்கிய கரடி

குன்னுார்: குன்னுார் ஸ்டான்லி பார்க் பகுதியில் இன்று (நவ.,11) அதிகாலை நீண்ட நேரம் சாலையில் படுத்து உறங்கிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கரடிகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், குன்னுார் அருகே உள்ள ஸ்டான்லி பார்க் பகுதியில் இன்று அதிகாலையில் பாபுராஜ் என்பவர் பணிக்கு செல்லும்போது, சாலையின் நடுவே கரடி ஒன்று படுத்து உறங்கி கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கரடி அங்கிருந்து நகரவில்லை. பின்னர், வாகனத்திலிருந்து தொடர்ந்து ஒலி எழுப்பிய பிறகு அங்கிருந்து எழுந்த கரடி, அருகில் இருந்த புதர் செடிகள் பகுதிக்குள் புகுந்தது. மக்கள் கூறுகையில், ‘அப்பகுதிக்கு தொடர்ந்து வந்து செல்லும் கரடியை உடனடியாக கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !