உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உணவகத்துக்குள் புகுந்த டிப்பர் லாரியால் பரபரப்பு

உணவகத்துக்குள் புகுந்த டிப்பர் லாரியால் பரபரப்பு

கோத்தகிரி, ; கோத்தகிரி டானிங்டன் உணவகத்திற்குள், டிப்பர் லாரி புகுந்து விபத்துக்குள்ளானதில், அங்கிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கோத்தகிரி டானிங்டன் பகுதியில் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கோடநாடு பகுதியில் இருந்து, மேட்டுப்பாளையத்திற்கு செல்வதற்காக, டிப்பர் லாரி கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது.அப்போது, கேர்பெட்டா பகுதியில் லாரி பிரேக் பிடிக்காமல், வேகமாக வந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது மோதி, உணவகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.குறிப்பிட்ட நேரத்தில், பணியாளர்கள் உணவகத்தின் பின்புற அறையில் பணியில் ஈடுபட்டிருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், காரில் பயணித்த இரு ஆசிரியர்கள், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிய நிலையில், வழக்கு பதிவு செய்த கோத்தகிரி போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை