மேலும் செய்திகள்
பாதுகாப்பாற்ற குட்டை; அதிகாரிகள் 'அசட்டை'
27-May-2025
பந்தலுார் : பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.இந்நிலையில், வீட்டியாட்டிக்குன்னு என்ற இடத்தை சேர்ந்தவர் பாலன் என்பவர் வீட்டின் அருகே உள்ள கிணறு திடீரென உள்வாங்கிய கிணற்றின் ஓரங்களில் பள்ளம் ஏற்பட்டது. இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டதுடன், கிணற்றை சுற்றிலும் கயிறு கட்டி தற்காலிக பாதுகாப்பு ஏற்படுத்தி உள்ளனர். வருவாய் துறையினர் கூறுகையில், 'புவியியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கிணற்றின் அடிப்பகுதியில் நீரோட்டங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
27-May-2025