மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
27-Dec-2025
ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழகத்தில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கொத்தடிமை முறை தெரியவரும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறையை அறவே ஒழிக்கும் வகையில், அரசு அலுவலகங்களில் உறுதி மொழி எடுக்கப்படுகிறது. அதன்படி, ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, உறுதிமொழியைவாசிக்க, அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
27-Dec-2025