மஞ்சூர் சாலையில் விபத்து: 8 பேர் காயம்
ஊட்டி; குன்னுாரில் கீழ் குந்தாவுக்கு நேற்று காலை அரசு பஸ், 11:00 மணியளவில் சென்றது. டிரைவர் நந்தகுமார் ஓட்டினார். பஸ்சில், 30 பயணிகள் இருந்தனர். அதே நேரத்தில், குந்தாவில் இருந்து பெங்கால் மட்டம் பகுதிக்கு, மாநில பேரிடர் மீட்பு படையினர் அடங்கிய போலீஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது. போலீஸ் சதாம் உசேன் ஓட்டினார். போலீஸ் வேனும் அரசு பஸ்சும் மெரிலாண்ட் பகுதியில் வளைவான இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் அரசு பஸ் டிரைவர் நந்தகுமார் காயம் ஏற்பட்டு, ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காயமடைந்த ஏழு பேர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.