உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய நெடுஞ்சாலையில் சகதியால் விபத்து அபாயம்

தேசிய நெடுஞ்சாலையில் சகதியால் விபத்து அபாயம்

குன்னுார்: குன்னுாரில் மழை நீர் கால்வாய் முழுமையாக பராமரிக்காததால், சாலையில் சேறும் சகதியும் நிறைந்து போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீலகிரி மாவட்டம் குன்னுார் - - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், தடுப்பு சுவர் அமைத்தல் உட்பட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மழை கொட்டுவதால், குன்னூர் முதல் அருவங்காடு வரை மழை நீர் கால்வாயில் செல்ல முடியாமல்சாலையில் ஓடுகிறது. குன்னூர் ரயில்வே குடியிருப்பு அருகே ரயில்வே துறையினர் தடுப்பு சுவர் அமைக்கும் இடத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. சேறும் சகதியும் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதிகளில் வாகனங்கள் இயக்க மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மழையால் அடித்து வரப்பட்ட கற்கள், அருவங்காடு முதல் பாய்ஸ் கம்பெனி வரை சாலையில் சிதறி கிடக்கின்றன. இதனால் வாகனங்கள் இயக்க முடியாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. சமீபத்தில் இந்த சாலையில் பெயரளவுக்கு பேட்ச் வர்க் நடந்த நிலையில், அங்கு கற்கள் பெயர்ந்து வருகின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் முறையாகவும், தரமாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என டிரைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை