உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாழை நாற்றுகள் விற்பனை விதிகளை மீறினால் நடவடிக்கை

வாழை நாற்றுகள் விற்பனை விதிகளை மீறினால் நடவடிக்கை

கூடலுார்; கூடலுாரில், தோட்டக்கலை துறை சார்பில் பாகற்காய் விதைகள், நேந்திரன் வாழை நாற்றுகள் குறித்த சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, கூடலுார் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஐஸ்வரியா தலைமை வகித்து பேசுகையில், ''பாகற்காய் விதை, வாழை நாற்றுகள் விற்பனை செய்யும், வியாபாரிகள் விதை உரிமம் பெற வேண்டும். வரும் நாட்களில் விவசாயிகள், விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற வணிகர்களுக்கு பாகற்காய் விதைகள், வாழை நாற்றுகள் தேர்வு செய்து, அதனை பயிரிட்டு அறுவடை செய்யும் வரை பயிற்சி அளிக்கப்படும். மேலும், பயிர்களை தாக்கும் வைரஸ் நோய் குறித்தும், அதனை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார். விதை ஆய்வாளர் ரமேஷ் பேசுகையில், ''விதை உரிமம் இல்லாமல் பாகற்காய் விதை, வாழை நாற்றுகள் விற்பனை செய்வது, விதை சட்டப்படி குற்றமாகும். எனவே, வணிகர்கள் இதற்கான உரிமம் பெற்று தரமான பாகற்காய் விதை, நேந்திரன் வழை நாற்றுகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். கூட்டத்தில், வாழை மற்றும் பாகற்காய் கொள்முதல் வணிகர்கள் பங்கேற்றனர். தோட்டக்கலை அலுவலர் பிரியங்கா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை