உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவசாய உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி

விவசாய உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி

பந்தலுார்: பந்தலுார் அருகே குந்தலாடி பகுதியில், விவசாயிகளுக்கு உபகரணங்கள் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 'ஆல் தி சில்ட்ரன்' அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத் தலைமை வகித்தார். 'சோலிடாரிட்டி' நிறுவன ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், பயிற்றுனர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். இந்திய தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் அஞ்சலி, 'பரப்பு இயந்திரம், களை கொத்து, கையுறை, பூச்சி விரட்டி, பூச்சிக்கொல்லி இயற்கை மருந்துகள்,' உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி, தேயிலை விவசாயிகள் அரசு மூலம் வழங்கப்படும் திட்டங்களை பெற்று பயன்பெறுவது குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில், விவசாயிகள் மற்றும் தேயிலை வாரிய அலுவலர்கள் பங் கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி