உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி, கோத்தகிரியில் அ.தி.மு.க. செயல்வீரர் கூட்டம்

ஊட்டி, கோத்தகிரியில் அ.தி.மு.க. செயல்வீரர் கூட்டம்

கோத்தகிரி; ஊட்டி, கோத்தகிரியில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வினோத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இம்மாதம், 23 மற்றும் 24-ம் தேதிகளில் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்'சுற்று பயணத்திற்கு, ஊட்டி, கூடலுாருக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது; பொது கூட்டம் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோத்தகிரியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நீலகிரியை சொந்த மாவட்டமாக நினைத்து,எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதேபோல, பழனிசாமியும் அதிக திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ஆனால், தி.மு.க., அரசு, நீலகிரி மாவட்டத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. 20௨6 சட்டசபை தேர்தலில் பழனிசாமி தலைமையில், மீண்டும் ஆட்சி அமைவது உறுதி. அவர் நிறுத்தும் வேட்பாளரை பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மக்கள் தி.மு.க., அரசை வெளியேற்ற முடிவு செய்துவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட பொறுப்பாளர் வேலுசாமி, எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், முன்னாள் எம்.பி., அர்ஜூணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு, இளைஞரணி மாநில நிர்வாகி வக்கீல் பாலநந்தகுமார், குன்னுார் தொகுதி செயலாளர் மாதன், சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ