உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி

ஊட்டி: ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அரசு சார்பில் சைக்கிள் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு சைக்கிள் போட்டி ஊட்டியில் உள்ள படகு இல்லம் செல்லும் சாலையில் தண்டர் வோர்ல்ட் பகுதியில் இருந்து துவங்கி சேரிங்கிராஸ் வரை நடந்தது. போட்டியை கலெக்டர் லட்சுமிபவ்யா துவக்கி வைத்தார். போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சான்றிதழ், பரிசு வழங்கப்பட உள்ளன. எஸ்.பி.நிஷா, மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, ஊட்டி நகராட்சி கமிஷனர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை