உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜெபமாலை அன்னை ஆலய ஆண்டுவிழா

ஜெபமாலை அன்னை ஆலய ஆண்டுவிழா

ஊட்டி : ஊட்டி ரோஸ்மவுன்ட் ஆலயத்தின் ஆண்டு விழா கடந்த, 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் கொடி ஏற்றிவைத்து ஆண்டு விழாவை துவக்கி வைத்தார் .சிறப்பு திருப்பலி மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு உறுதி பூசுதல், புதுநன்மை, அருட்சாதனம் வழங்கி சிறப்பித்தார். நேற்று ஆலயத்தின் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. மறைமாவட்ட பொருளாளர் ஸ்டீபன் லாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஸ்டீபன் லாசர் தலைமையில் பங்கு குரு லியோ சேவியர் இணைந்து ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றினர். ஏற்பாடுகளை பங்கு குருலியோ சேவியர் மற்றும் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை