உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சமூக விரோத செயல்கள்

 சமூக விரோத செயல்கள்

ஊட்டி: ஊட்டி சேரிங்கிராசில் நகராட்சிக்கு சொந்தமான பாரதியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வணிக வளாகத்தில் தரைப்பகுதி , படிக்கட்டுகள் போதிய பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் படிக்கட்டுகளில் அமர்ந்து சிலர் மது அருந்தி மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து செல்வதுடன், வளாகத்தை கழிப்பிடம் போல் பயன்படுத்தி வருகின்றனர். வணிக வளாகத்திற்கு வரும் மக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி