உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆஷா பணியாளர்களால் கலெக்டர் அலுவலகம் முற்றுகை; வாக்கு வாதம் ; தள்ளு முள்ளு; மறியல்

ஆஷா பணியாளர்களால் கலெக்டர் அலுவலகம் முற்றுகை; வாக்கு வாதம் ; தள்ளு முள்ளு; மறியல்

ஊட்டி; ஆஷா பணியாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.'குறைந்தபட்ச ஊதியம், 26,000 ரூபாய் வழங்க வேண்டும்,' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆஷா பணியாளர்கள் நேற்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத் போராட்டத்தை துவக்கி வைத்தார். ஆஷா சங்க தலைவர் கேசினி ரோஜா தலைமை வகித்தார். ஆஷா பணியாளர்கள் மாநில செயலாளர் சீதாலட்சுமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.இந்த போராட்டத்தின் போது நுாற்றுக்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உள்ளே செல்ல முயற்சித்தபோது, ஜி1 இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நுழைவுவாயில் கேட்டை இழுத்து மூடினர்.

சாலையில் அமர்ந்து போராட்டம்

போலீசாருக்கும் ஆஷா பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம், 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆஷா பணியாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.'கலெக்டரை சந்திக்க வேண்டும்,' என, கூறிய பணியாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மறியல் போராட்டத்தை கைவிட மறுத்த ஆஷா பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை