அவலாஞ்சியில் 18 செ.மீ , மழை; கடும் குளிரால் மக்கள் அவதி
ஊட்டி; மாவட்டத்தில் அவலாஞ்சியில், 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஊட்டி, குந்தா கூடலுார் மற்றும் பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதத்திலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இரண்டு முறை 'ரெட் அலர்ட்' அறிவிப்பால் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இம்மாதம் இறுதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை காலம் என்பதால், மாவட்ட நிர்வாகம் பேரிடர் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அவலாஞ்சியில்,18 செ.மீ., அப்பர் பவானி, 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது.