உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விபத்தில்லாத தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

விபத்தில்லாத தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

குன்னுார் : குன்னுார் தனியார் பள்ளியில், தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லாத தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் பேசுகையில், ''விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு அவசியம். ஆடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது: உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். மேலும் மழையின் காரணமாக ஏற்படும் பேரிடரின் போது முன்னெச்சரிக்கை அவசியம். பேரிடர் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தர வேண்டும்,'' என்றார். முன்னணி தீயணைப்பாளர் சுப்ரமணியம் பேசுகையில்,''மருத்துவமனை அருகில் பட்டாசு வெடிப்பதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படும். இது போன்ற இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். 'தினமலர்' நாளிதழில், அறிவியல் ஆயிரம்; தகவல் சுரங்கம்; இதே நாளில் அன்று; ஆகிய தலைப்புகளில் தினமும் வெளிவரும் தகவல்கள் மாணவ, மாணவியர் படிக்க வேண்டும். இவை போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இவற்றை படித்தால் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படும்,'' என்றார்.நிகழ்ச்சியில், தீ தடுப்பு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பேரிடர் மீட்பு குறித்த செயல் விளக்கத்தில் மாணவியரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி